அசத்தலான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?





அசத்தலான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

0
உலகம் முழுவதும் உள்ள நடுத்தர வயதினரிடையே, குறிப்பாக பெண்களுக்கு எலும்பு திடஇழப்பு என்பது பொதுவான ஒன்று. 
அசத்தலான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?
எலும்பு திடஇழப்பு வந்து ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற தீவிர நிலைமைகளுக்கு வழிவகுக்கும். கோழியில் பாஸ்பரஸ் கூட நன்றாகவே இருக்கிறது. 

அதை சரியான அளவில் உணவுடன் எடுத்துக் கொள்ளும் போது எலும்பு எடை மற்றும் திடத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான பற்களுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மிக முக்கியமான கூறுகள் தேவைப்படுகிறது. 

பல் ஆரோக்கியத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு சரியான அளவுகளில் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. 

கோழியில் உள்ள பாஸ்பரஸ் வந்து பல் சிதைவைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக உள்ளது என்பதை கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். 
சரி இனி சிக்கன் கொண்டு அசத்தலான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (கீறியது)

கறிவேப்பிலை – சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செட்டிநாடு மசாலாவிற்கு…

மல்லி – 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 5-6

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

பட்டை – 3 இன்ச்

கல்பாசி – 2 துண்டு

ஏலக்காய் – 4 கிராம்பு – 4

மிளகு – 1 டீஸ்பூன்

அன்னாசிப்பூ – 1 
செய்முறை:
அசத்தலான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?
முதலில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிற மாக வதக்கவும். 
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் மிதமான தீயில் சிக்கனை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

இப்போது சிக்கனில் இருந்து தண்ணீர் வெளி வந்திருக்கும். இந்நிலையில் மீண்டும் சிக்கனை பிரட்டி விட்டு, மூடி வைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைக்க வேண்டும். 
சிக்கன் நன்கு வெந்ததும், தீயை அதிகரித்து, அதில் மசாலா பொடியை சேர்த்து 1 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்த மல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெடி !
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)