டேஸ்டியான மாங்காய்த் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





டேஸ்டியான மாங்காய்த் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

0
மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. 
இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாக குறையும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்சினை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி விடும். 

மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகிறார், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும். 
பச்சை மாம்பழம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. கவிதா தேவ்கன் கூறுகையில், 'வைட்டமின்-பி-3 மிகக் குறைவான உணவுப் பொருட்களிலேயே உள்ளது. 

அதில் பச்சை மாம்பழமும் ஒன்று. இது நிசின் என்றும் அழைக்கப்படுகிறது. இதய பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ள உறுப்பு. இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாம்பழத்தை பச்சையாக சாப்பிட வேண்டும். 
மாங்காயில் கால்சியம் அதிகம் உள்ளது. இது உங்கள் பற்களை வலுவாக்கும். ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்தால், பச்சையாக சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும். 

மேலும், உங்கள் பற்களில் ஒரு பளபளப்பை உருவாக்கும். பற்களின் வலிமைக்கு பச்சை மாங்காய் துண்டுகளை மென்று சாப்பிடலாம். 

சரி இனி மாங்காய் பயன்படுத்தி டேஸ்டியான மாங்காய்த் துவையல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
வேண்டியவைகள்

திட்டமான மாங்காய் - 1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் - 3 நறுக்கிக் கொள்ளவும்.

புதினா இலைகள் –2 கப்

பச்சைக் கொத்த மல்லி - நறுக்கியது 1கப்

வெங்காயம் - 1

தேங்காய்த் துருவல் - கால்கப்

இஞ்சி - சிறிய துண்டு

ருசிக்கு - உப்பு
குறிப்பிட்டி ருக்கும் யாவற்றையும் மிக்ஸியில் இட்டு ஜலம் விடாமல் கெட்டியாக அறைத்து எடுக்கவும். உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
ருசியான சட்னியை வேண்டிய அளவு தளர்த்திக் கொண்டு போண்டா, பஜ்ஜி, பகோடாக் களுடனும், கெட்டியாக தோசை, ரொட்டி, பூரி வகைகளுட னும் உண்ணலாம். 

பிரிஜ்ஜில் வைத்து 2 - 3 நாட்சள் உபயோகிக் கலாம். ஸாண்ட் விச்சிற்கும் ஏற்றது.

Post a Comment

0Comments

Post a Comment (0)