சுவையான மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி?





சுவையான மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி?

0
இந்த சைவ உணவான சோயா உணவிலிருந்து நமக்கு தேவையான புரோட்டின் அதிக அளவு கிடைக்கிறது. இந்தப் புரதத்தில் நம் உடலுக்கு அடிப்படை தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளது.
சுவையான மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி?

இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியாது. முக்கியமாக, கடல் மீன்களில் காணப்படும் அமினோ அமிலம் ஆன ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சைவ உணவான இதில் அதிகம் உள்ளது.

இது உடலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, இதை இறைச்சி உணவுகளுக்கு சிறந்த மாற்று உணவு என்று சொல்லலாம். எனவே, இறைச்சி பிடிக்காதவர்கள், நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த மீள்மேக்கரைப் சாப்பிடலாம். 

இதனால், இறைச்சியில் இருந்து கிடைக்கக் கூடிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கப்,

மீல்மேக்கர் – 1 கப்,

உப்பு – தேவைக்கு,

வெங்காயம் – 1,

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2,

மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,

சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,

இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,

பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் – தலா 1/4 டீஸ்பூன்,

பிரிஞ்சி இலை – சிறிது,

புதினா, கொத்த மல்லித்தழை – 1 கைப்பிடி,

நெய் + எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
சுவையான மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி?

வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும். 

தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

நன்றாக கொதிக்க ஆரம்பித்த வுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். 

விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி. வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)