ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவகிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ? அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன.
ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவதானியங்கள் குறிப்பிட்ட கிழமையில் பூஜைகளின் பொழுது அந்தந்த கிரகத்திற்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
முளைகட்டிய தானியங்களில் அதிகப் புரதச் சத்து நிறைந்துள்ளது. அத்துடன் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாத்துச்சத்துகளும் அடங்கியுள்ளன.
பல விதமான தானியங்களுக்கு பலவிதமான சத்துகள் இருக்கும். எனவே பல வகையான தானியங்களை ஒன்றாக சமைத்து சாப்பிட்டால் கூடுதல் ஊட்டச்சத்துகளை ஒன்றாகப் பெறலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்த மல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
தேங்காய்ப் பால் - ஒரு கப்,
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முளை கட்டிய பயறுகளை வேக வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்த மல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்த மல்லி தழை தூவி பரிமாறவும்.
சூப்பரான முளை கட்டிய நவதானிய சூப் ரெடி.