வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும்.
வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு.
வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.
அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இயற்கையின் வரப்பிரசாதம் இந்த வேம்பு. வேப்பம்பூவில் உள்ள சக்தி கெட்ட கொழுப்பை அகற்றி உடல் பருமன் போற்ற சிரமத்திற்கு நம்மை ஆளாகாமல் நம் உடலை சீராக வைக்க பேருதவி புரிகிறது.
வாயுத்தொல்லை, ஏப்பம், பசியின்மை ஆகியவைக்கு வேப்பம்பூ நல்ல தீர்வாகும். மேலும் வேப்பபூ உணவில் இருந்து வரும் நறுமணம் தலை பாரத்தை குறைத்து சுவாச புத்துணர்ச்சிக்கு உதுத்துணையாக இருக்கிறது.
பித்தத்தைக் குறைக்கவும், சளியைக் கட்டுப்படுத்தவும், குடல் புழுக்களைக் குணப்படுத்தவும் வேப்பம்பூ பெரும் பங்கு வகிக்கிறது.
பல் பிளேக் (பற்சொத்தை), வயிற்றில் உள்ள பூச்சி அகற்ற, அல்சர், சொரியாசிஸ், காய்ச்சல், வயிற்றுக்கோளாறு, சுவாச பிரச்சனை, மலேரியா, ஒட்டுண்ணி நோய்கள், தோல் நோய்கள், இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இன்னும் பல நோய்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்,
உலர்ந்த வேப்பம்பூ - கால் கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வேப்பம் பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து...
ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப் பால், உப்பு, வேப்பம்பூ சேர்த்து வேக விட வும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். இது உடல் நலத்துக்கு பெரிதும் உதவும்.
குறிப்பு:
வேப்பம்பூ, தேங்காய்ப்பால் இரண்டையும் தொடர்ந்து சாப்பிட்டால்... வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பூச்சிகள் தொல்லை யில் இருந்து நிவாரணம் பெறலாம்.
தற்போது வேப்பம்பூ சீஸன் என்பதால், அதை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.