நெய்மீன் கறி ரெசிபி செய்வது எப்படி?





நெய்மீன் கறி ரெசிபி செய்வது எப்படி?

0
மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
நெய்மீன் கறி ரெசிபி


பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.மீன் குழம்பு பிடிக்காத வர்கள் என்று நம்மில் யாராவது இருக்க முடியுமா?

முள் குறைவான மீன் தான் நம் அனைவரின் தேர்வாகவும் இருக்கும். அப்படி யானால் நீங்கள் நெய்மீனை வாங்கி சமைக்கலாம். சுவையான நெய்மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

8 துண்டுகள் நெய்மீன்

2 மேஜைக் கரண்டி தேங்காய் எண்ணெய்

1 தேக்கரண்டி கடுகு

1/2 தேக்கரண்டி வெந்தயம்

1 கொத்து கறிவேப்பிலை

2 இன்ச் துண்டு இஞ்சி

3 பல் பூண்டு

2-3 பச்சை மிளகாய்

12 சின்ன வெங்காயம், நறுக்கப்பட்ட

1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்

1 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்

1/2 தேக்கரண்டி மிளகு தூள்

சிறிதளவு புளி

தேவைக்கேற்ப உப்பு

தேவைக்கேற்ப தண்ணீர்
அருமருந்தாகும் தயிர் !
எப்படி செய்வது

முதலில் மீனை உப்பு போட்டு கழுவி தனியே எடுத்து வைக்கவும். 1/8 கப் வெந்நீரில் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிய புளி தன்ணியையும் தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் மண்பானை அல்லது கடாயை மிதமான சூட்டில் வைக்கவும். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொறிய விடவும்.

கடுகு வெடித்த பின் அதில் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் வரும்வரை தாளிக்க வேண்டும். அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் அதில் சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது புளி கரைசலை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் தன்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ராயகோளா பிரியாணி செய்வது எப்படி?
புளித்தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் நெய்மீனை போட்டு மூடி வைக்கவும். மீன் 5 நிமிடத்தில் வெந்து விடும் என்பதால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பு சுண்டியதும் இறக்கி, அதில் கறிவேப்பிலை இலைகளை தூவி சாதத்துடன் பரிமாறவும். மரவள்ளி கிழங்குடன் சேர்த்து சாப்பிட இன்னும் ருசியாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)