பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம், சிறுநீரகங்கள், பிற உறுப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நாற்பது வயதைத் தாண்டியவர்கள் இதை சாப்பிட்டால் இதயம் தொடர்பான பாதிப்புகள் சொல்லிக் கொள்ளாமல் உடலுக்குள் வந்து உட்கார்ந்து விடும். எனவே உஷார்.
முழுவதும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உடனடி நூடுல்ஸில் பொதுவாக ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் பிற ரசாயன சேர்க்கைகள் நிறைந்திருக்கும்.
இப்படிப்பட்ட நூடுல்ஸை தொடர்ந்து அதிகமாக உட்கொள்ளும் போது ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.
உடனடி நூடுல்ஸில் அக்ரிலாமைடு எனப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது, இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
கார்சினோஜென்ஸ் என்பது அறியப்பட்ட புற்றுநோய் காரணியாகும். குழந்தைகளை நூடுல்ஸுக்குப் பழக்கப் படுத்துவதை விட இடியாப்பங்களில் இனிப்பு, காரம் சுவை நிறைந்தாக செய்து தரலாம்.
இடியாப்பமும் நூடுல்ஸ் போலவே இருப்பதால் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது. சுவையாக செய்து தந்தால் சாப்பிடுவார்கள். தேவையில்லாமல் உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாக மாட்டார்கள்.
தேவையானவை:
கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (பிளெய்ன்) - 2 கப் (ஒரே சீராக உடைத்தது),
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட்,
பீன்ஸ் (எல்லாம் சேர்ந்தது) - ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள:
துருவிய தேங்காய் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கஸ¨ரி மேத்தி (காய்ந்த வெந்தயக் கீரை) - 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி... முதலில் காய்கறிகளை வதக்கி, பின்னர் நூடுல்ஸை சேர்த்து வதக்கி,
முக்கால் கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் (இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்), அரைத்த விழு தினைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் எல்லாமாகச் சேர்த்து வெந்து விடும்.
அப்போது எலுமிச்சைச் சாற்றினை விட்டு கலந்து, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரி க்கவும்.
விருப்பப் பட்டால், இஞ்சி - பூண்டு விழுதை வதக்கி சேர்க்கலாம்.