சுவையான ரோகன் ஜோஸ் ரெசிபி செய்வது எப்படி?





சுவையான ரோகன் ஜோஸ் ரெசிபி செய்வது எப்படி?

0
ஆட்டிறைச்சி புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருள் மட்டுமல்ல. ஆட்டிறைச்சி மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. 
சுவையான ரோகன் ஜோஸ் ரெசிபி செய்வது எப்படி?
ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் மற்றும் இதில் ஒள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. 

ஆய்வுகளிலும் மட்டன் கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
ஆட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளித்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மட்டனில் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றம் வலிமைக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன. 

எனவே மட்டனை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சர்க்கரை நோயாளிகளில் தங்கள் இரத்த சர்க்கரை அளவை உணவுகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். 

குறிப்பாக மட்டனை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. மட்டன் குழம்பை விரும்பாதவர்கள் உண்டா என்ன…! 

காஷ்மீரிகளின் உணவுகளில் ஒன்று ரோகன் ஜோஸ். வாசனையான மாசாலக்கள் கலந்து தயிர் சேர்த்து குக்கரில் கறி மிருதுவாக வேக வைக்க வேண்டும். டின்னர் பார்ட்டிக்கு சுவையான உணவை எளிதாக தயாரிக்கலாம்.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

தேவையான பொருட்கள்

1 கிலோ கிராம் இறைச்சி

1 கப் கடுகு/ ரிஃபைண்ட் ஆயில்

3 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்

3 தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள்

2 தேக்கரண்டி இஞ்சி பவுடர்

2 தேக்கரண்டி சீரகத்தூள்

3 தேக்கரண்டி கறுப்பு ஏலக்காய்

1 தேக்கரண்டி பெருங்காயம்

4 துண்டுகள் பச்சை ஏலக்காய்

2 பட்டை

2 பிரிஞ்சி இலை

2 கிராம்பு

1/3 தேக்கரண்டி குங்குமப் பூ (விருப்பம்)

1 கப் தயிர்

ஒரு சிட்டிகை உப்பு

எப்படி செய்வது 
கறியை நன்றாக கழுவி, குக்கரில் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றவும். பட்டை, பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், கிராம்பு, ஒரு டே.ஸ்பூன் உப்பு, பெருங்காயம், மற்றும் கறியை போடவும். கறி நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீரை சேர்க்கவும்.
பின் சிவப்பு மிளகாய்த் தூள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை கறியில் சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?
அடுத்து தயிரை ஊற்றி நன்றாக கிளறவும். மசாலா மற்றும் தயிர் என அனைத்தும் ஒன்றாக சேர நன்றாக கிளறவேண்டும்.

பின் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பெருஞ்சீரக பொடி, இஞ்சி பொடி, சேர்த்து 2 நிமிடம் குக்கரை மூடிவைத்து வேக வைக்கவும். கறி மிருதுவாக வெந்தபின் கருப்பு மற்றும் பச்சை ஏலக்காயை போடவும்.

இறுதியாக இறக்கு வதற்கு முன் சீரகத் தூளைத் தூவி சில நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)