டேஸ்டியான மசாலா முந்திரி பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான மசாலா முந்திரி பிரியாணி செய்வது எப்படி?

0
நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற நட்ஸ் வகைகளில் நாம் பெரிதும் விரும்பக் கூடியது முந்திரிப் பருப்புகள் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பருப்புகளை பலர் ஸ்நாக்ஸ் போல நேரடியாகவே சாப்பிடுகின்றனர். 
மசாலா முந்திரி பிரியாணி செய்வது எப்படி?
இன்னும் சிலர், இனிப்புகள், இதர சமையல்களில் முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்கின்றனர். 

தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. 

முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. ரத்த சர்க்கரை அளவு, இதய நிலைமை, எடை இழப்பு மற்றும் பலவற்றில் முந்திரி நன்மைகளை தருகிறது. 
முந்திரியின் ஆரோக்கியத்தை முழுமையாக பெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 28.35 கிராம் முந்திரி தான் சாப்பிட வேண்டும். அதுவும் அவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. 

பொன்னிறமாக எண்ணெய் இல்லாமல் வறுத்து சாப்பிட வேண்டும். சரி இனி முந்திரி பயன்படுத்தி டேஸ்டியான மசாலா முந்திரி பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,

கடைகளில் கிடைக்கும் முழு மசாலா முந்திரி - 15,

பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, கசகசா, லவங்கம் சேர்த்து வறுத்து அரைத்த பொடி - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க:

தோல் நீக்கிய வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா கால் கப்,

காய்ந்த மிளகாய் - 4,

முந்திரித் துண்டுகள் - 6,

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும். 

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
அதனுடன் ஒரு டீஸ்பூன் பட்டை மசாலா பொடி சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, மசாலா முந்திரியை லேசாக வறுத்து, வடித்த சாதத்தை அதில் போட்டுப் புரட்டி, பொடித்து வைத்த பொடியைத் தூவி இறக்கவும்.

சிறுவர்கள் விரும்பும் இந்தப் பிரியாணி, காலையில் செய்தால் மாலை வரை நன்றாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)