ப்ரோக்கோலிக்கு அடுத்து, பரட்டை கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்திருக் கிறது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன்கள் சீராக இயங்குகிறது.
கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா 3 இருப்பதால் ஆண்டி -இன்ஃப்ளமேட்ரி தன்மையும் இருக்கிறது.
இந்த பரட்டைக் கீரையில் பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கிறது. வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
சன்னி லியோனின் ஆணுறை விளம்பரங்கள் - வீடியோ !பரட்டை கீரையின் சாறு எடுத்து அதனை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இன்சுலின் சுரப்பை தூண்டுவதுடன், சிறுநீரகம், இருதயத்தின் ஆரோக்கிய த்தையும் பராமரிக்கிறது.
கண்கள், பாதம் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய நாட்பட்ட நோய்களை போக்கும் தன்மை கொண்டது. இந்த கீரையின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க, முருங்கைக் கீரையைவிட பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை. ரத்த சோகை பிரச்சனை தீர்ப்பது முதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது வரை, இந்த முருங்கைக் கீரையில் இல்லாத விஷயமே இல்லை.
இந்த கீரைக்கு அடுத்தபடியாக, உடலிலுள்ள கொழுப்புகளை கரைக்க கூடியது பரட்டைக்கீரை எனலாம். இலைகள் நீளமாகவும், அகலமாகவும், மிருதுவாகவும் இருந்தாலும், சுருட்டை வடிவிலேயே காணப்படும்.
அதனால் தான், இதற்கு பரட்டைக்கீரை என்று பெயர் வந்ததாம். கசப்பு அதிகம் என்பதால், இந்த கீரையை, நிறைய பேர் விரும்புவதில்லை.
எனினும், சிறந்த சத்துக்கள் இந்த கீரையில் நிரம்பி உள்ளதால், வெளிநாட்டினர் அதிகம் உபயோகிக்கும் கீரையாக இது திகழ்ந்து வருகிறது.
ஒரு கப் பரட்டைக் கீரையில், K, A, C, B1, B2, B3, B6 வைட்டமின்கள், கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, புரதம், கார்போ ஹைட்ரேட், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் ஏகப்பட்டவை நிரம்பி உள்ளன
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம். காரணம், நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைப்பதில், பரட்டைக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும், இந்த கீரையில் அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடக்கிறது. மலச்சிக்கலும் தீர்க்கிறது.
க்ளைசமிக் இண்டெக்ஸ்:
இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிக குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
ஸ்டார்ச்:
பரட்டை கீரையில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட் உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.
ஆண்டி ஆக்ஸிடண்ட்:
இந்த பரட்டை கீரையில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட நோய்கள் குணமாகிறது.
கலோரிகள்:
பரட்டைக்கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதன் சாறு எடுத்து பருகலாம்.
நார்ச்சத்து:
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருப்பதுடன் மலச்சிக்கல் குணமாகிறது.