பாஸ்தாவை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிலாம்.பாஸ்தாவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளதால் இது நம் உடலின் செயல்பாட்டுக்கு எரிபொருளாக அமைகிறது.
சிலர் பாஸ்தாவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணமே அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் தான். பாஸ்தாவில் ப்ரோடீன், மினரல்ஸ், நார்சத்து உள்ளிட்ட பல நன்மைகளும் அடங்கியுள்ளது.
இவை அனைத்தும் பாஸ்தாவின் தரத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். ஆதாவது பாஸ்தா பல வடிவங்களில் விற்கப்படுகிறது. சங்கு, நூடுல்ஸ் உள்ளிட்ட பல டிசைன்களில் பாஸ்தா விற்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் பாஸ்தாவை கோதுமை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். சில இடங்களில் மைதா மாவை பயன்படுத்தி பாஸ்தா தயாரிக்கப் படுகிறது. இவை இரண்டுக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன.
கோதுமை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாஸ்தாவில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. உடலுக்கு தேவையான சக்தியை கோதுமை பாஸ்தா தருகிறது.
மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பாஸ்தா உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதில்லை. இன்னும் சொல்லப் போனால் மைதா பாஸ்தா உடல் எடையை அதிகரிக்கச் செய்து விடும்.
இரத்தத்தில் சக்கரையின் அளவையும் அதிகரித்து விடும். ஆகையால் எந்த வகை பாஸ்தாவை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் கவனம் வேண்டும்.
ஒரு கிண்ணம் நிறைய பாஸ்தா என்பது எப்போது கொடுத்தாலும் எல்லோராலும் சாப்பிட முடிகிற உணவு. இதை எளிமையாக செய்ய முடிகிற செய்முறை இங்கு பார்க்கலாம்.
மூன்று வர்ணங்களில் உள்ள பாஸ்தாவை இதில் பயன்படுத்தி யுள்ளோம். இதை வீட்டில் தயாரித்து அனைவருக்கும் பறிமாறலாம்.
தேவையான பொருட்கள்
200 gms பாஸ்தா
1 கப் பிரக்கோலி, நறுக்கப்பட்ட
1 நடுத்தரமாக கேரட், நறுக்கப்பட்ட
1/2 கப் வெங்காயத் தாள், நறுக்கப்பட்ட
1/4 கப் வெண்ணெய் (க்யூப்)
1 பூண்டு
1 தேக்கரண்டி காய்ந்த பேசில்
1/2 தேக்கரண்டி உப்பு
1/4 தேக்கரண்டி மிளகு
1/4 கப் வொயிட் வைன்
1/4 கப் பார்மசான் சீஸ், உதிர்ந்த
எப்படி செய்வது
பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பை போடவும். அதன்பின் 200 கிராம் பாஸ்தாவை அதில் போட்டு 8-10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
1 கப் பிரக்கோலி, நறுக்கப்பட்ட
1 நடுத்தரமாக கேரட், நறுக்கப்பட்ட
1/2 கப் வெங்காயத் தாள், நறுக்கப்பட்ட
1/4 கப் வெண்ணெய் (க்யூப்)
1 பூண்டு
1 தேக்கரண்டி காய்ந்த பேசில்
1/2 தேக்கரண்டி உப்பு
1/4 தேக்கரண்டி மிளகு
1/4 கப் வொயிட் வைன்
1/4 கப் பார்மசான் சீஸ், உதிர்ந்த
எப்படி செய்வது
பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பை போடவும். அதன்பின் 200 கிராம் பாஸ்தாவை அதில் போட்டு 8-10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
நிலவில் குடியேறும் மனிதன் கடைசி வரை பாருங்கள் !ஒரு கடாயில் பிரக்கோலி, காரட், வெங்காயம் ஆகிய வற்றை 3 நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். நன்றாக வெந்த பாஸ்தாவை கடாயில் போட்டு கலந்து சீஸ் தூவி இறக்கவும்.