100 வருடம் வாழ கருஞ்சீரகம் போதும் !





100 வருடம் வாழ கருஞ்சீரகம் போதும் !

0
கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப் படுகிறது. இந்த பொருளை நாம் மறந்து விட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். 
கருஞ்சீரகம்

மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்த பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. 

இது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. 
ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதயநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. 

இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது. கணையத்தை பாதுகாக்கும் பாதுகாவலன். சிறுநீரக கற்களை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. 

சோரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து. மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். 

இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.
100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இந்த டிப்ஸ் மேற் கொள்வீர்கள்.அப்படி என்ன நன்மைகள் தெரியுமா? 

பொதுவாகவே எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும் தருணத்தில் சரியாக படும். ஒரு சில உணவுப் பொருட்கள் ஒரு சிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். 

சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன் பின்னர் சளி பிடித்தல் தலைவலி வாந்தி மயக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம். 
ஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கருஞ்சீரகத்தின் நன்மைகள்:

கருஞ்சீரகப் பொடியுடன் பனை வெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். இது தாய் மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப் படுகிறது. 
100 வருடம் வாழ
இதே போன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப் படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவை யில்லாத கொழுப்பை அகற்றுவது என்பதே....

இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்தம் சுத்திகரிக்க செய்யும். 
மற்றொரு விஷயம் என்ன வென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி இருமல் இவை அனைத்துக்கும் ஓர் நல்ல மெடிசின் பயன்படக் கூடியது கருஞ்சீரகம் என்பது குறிப்பிடத் தக்கது. 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ்சீரகத்தை முறையாக பயனப்டுத்தினால் ஆரோக்கி யமாக பல ஆண்டுகள் வாழலாம்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)