இன்றைக்கு நாம் சாப்பிடக்கூடிய 80 சதவீத உணவுகளில் மைதா நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ரொட்டி, பிஸ்கட், புரோட்டா, பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா தான் பிரதானப் பொருளாக உள்ளது.
ஆனால் இதை தொடர்ச்சியாக நாம் சாப்பிட்டு வரும் போது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணரான நூபுர் பாட்டீலின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு மாதத்திற்கு மைதாவை முழுவதுமாக கைவிடும் போது, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்.
பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட மாவில் பெரும்பாலும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக காணப்படும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதே போன்று மைதாவிலும் நன்கு சுத்திகரிக்கப்பட்ட மைதா மூலம் தயார் செய்யப்படும் உணவுப் பொருள்களை சாப்பிடும் போது செரிமானம் ஆகாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே தான் ஒருமாத காலத்திற்காவது இதை நீங்கள் உணவு முறையில் தவிர்க்கும் போது செரிமான பிரச்சனையின்றி வாழ முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.
எனவே மைதாவை தவிர்ப்பதால்,இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
ஒயிட் சாக்லேட், தேங்காய், வெல்லம், ஏலக்காய், பாதாம் மற்றும் நட்ஸ் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பான ரெசிபியை ஹோலி பண்டிகையின் போது செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
மருந்து, மாத்திரை இல்லாமல் வியாதிகள் குணமடைய !
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க:
2 கப் மைதா
1/4 கப் நெய்
1/2 கப் தண்ணீர்
ஸ்டஃப் செய்ய:
1 கப் ஒயிட் சாக்லேட்
1/4 கப் உலர்ந்த தேங்காய்
ஒரு சிட்டிகை ஏலக்காய்
1/2 கப் பாதாம்
1 மேஜைக் கரண்டி வெல்லம்
மைதா, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும். ஒரு பௌலில் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து வைத்து கொள்ளவும். சாக்லேட் மற்றும் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ளதில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும். அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
தும்பிலி மீன் குழம்பு செய்முறை !சுடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும். ஹோலி பண்டிகையின் போது இதனை செய்து சாப்பிடலாம்.