சுவையான பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி? #Vadai





சுவையான பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி? #Vadai

0
உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 

உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
தொடர்ந்து ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாச மான உருளைக்கிழங்கு பிரட் வடையை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு – 2

பிரெட் துண்டுகள் – 10

வறுத்த ரவை – அரை கப்

அரிசி மாவு – இரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

கேரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிது

செய்முறை :
சுவையான பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?
வெங்காயம், ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 

தேவைப் பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏன்?
சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி. விருப்பப் பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு :

பிரட் ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது, இது செரிமானத்தின் போது ஆற்றலை கொடுக்கிறது. பிரட்டில் அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன. 

ஆனால் ஊட்டச்சத்துக்கள் மிக மிகக் குறைவாக உள்ளது. வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது நல்லது கிடையாது இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

வெறும் வயிற்றில் ரொட்டி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்வியை நாம் கேட்பதே இல்லை. நாமாகவே அது ஆரோக்கியமானது தான் என்று நம்பிக் கொள்கிறோம்.

இது பசியை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம்: நீங்கள் சாப்பிடும் ரொட்டி வகையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். பிரட்டில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம். 
குறிப்பாக வெள்ளை பிரட்டில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகம். காலை வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடும் போது, குறிப்பாக ஒயிட் பிரட் காலையில் எடுத்துக் கொள்ளும் போது அது அசாதாரணமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்யும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும்.

பிரட் அதிய கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு. அதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)