செரிமானம் செய்வதில் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக் கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாக்கும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.
தோசை, சப்பாத்தி, சாதம், நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் பட்டர் பீன்ஸ் பொரியல். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் - கால் கிலோ,
வெங்காயம் - ஒன்று,
முந்திரி - 5,
கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை, லவங்கம் - தலா ஒன்று,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்த மல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி,
எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்த மல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
இது… சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.