சூப்பரான சிக்கன் ரசம் செய்வது எப்படி?





சூப்பரான சிக்கன் ரசம் செய்வது எப்படி?

இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. 
சூப்பரான சிக்கன் ரசம் செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். 
கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. அது மட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. 

அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. 

இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
நாம் சமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் !
என்னென்ன தேவை?

சிக்கன் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 6 பல்

இஞ்சி - 1 சிறிய துண்டு

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

நறுக்கிய தக்காளி - 2

உப்பு - தேவைக்கு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்த மல்லி இலை - சிறிது
எப்படிச் செய்வது?
சிக்கன் ரசம் செய்வது
ஒரு ஜாரில் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும். 

குக்கரில் தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் விட்டு கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். 
பின் தக்காளி, சிக்கன் துண்டுகள், சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, குக்கர் மூடி கொண்டு மூடி வேக விடவும். வெந்த பின் கொத்த மல்லி இலை தூவி பரிமாறவும்.
Tags: