தேங்காய்ப்பால் கஞ்சி செய்வது எப்படி?





தேங்காய்ப்பால் கஞ்சி செய்வது எப்படி?

தேங்காயில் அதிக கொழுப்புச் சத்து இருக்கிறது என்பது உண்மை தான். நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போது தீங்கு விளைவிக்கும் கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும். 
தேங்காய்ப்பால் கஞ்சி

தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம்.
ஆனால் நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. 

தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.

மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.

வயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப் பால் கஞ்சி. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !
தேவையான பொருட்கள் :

பச்சரிசி – கால் கிலோ

பாசி பருப்பு – 50 கிராம்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

பெ.வெங்காயம் – 2

சோம்பு – 1 டீஸ்பூன்

பட்டை – சிறிதளவு

தேங்காய்த் துருவல் – கால் கப்

பச்சை மிளகாய் – 2

கொத்த மல்லித் தழை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – தேவைக்கு

உப்பு – தேவைக்கு

செய்முறை :

கொத்த மல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சரிசி, பாசி பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பூண்டுவை லேசாக இடித்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் கொட்டி அரைத்து பால் எடுத்து கொள்ளவும். 

 குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசி பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறி விடவும்.

அதனுடன் புதினா, கொத்த மல்லி தழை தூவி பருகலாம். சத்தான தேங்காய்ப் பால் கஞ்சி ரெடி.
Tags: