வெந்தயத்தின் இளம் விதைகளில் கார்போ ஹைட்ரேட் மற்றும் சர்க்கரை ஒளிந்திருக்கின்றன. வெந்தயத்தின் விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் ஒளிந்திருக்கின்றன.
இதில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாகவே உள்ளன. அதனால், உடல் சோர்வாக உள்ளவர்களும், கண் பார்வை மங்கலாக உள்ளவர்களும், உடல் சூடு அதிகமாக உள்ளவர்களும் தாராளமாக வெந்தயக்கீரையை சாப்பிடலாம்.
குளிர்ச்சியை தரக்கூடிய தன்மை இந்த வெந்தயத்துக்கு உண்டு. எனவே, உடலிலுள்ள உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கக் கூடியது.
வெந்தயமும் சரி, வெந்தயக்கீரையும் சரி பெண்களுக்கு அருமருந்து என்றே சொல்லலாம். மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யக்கூடிய சக்தி இந்த வெந்தயத்துக்கு உண்டு.
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் தீர்க்கக் கூடியது. வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய்களை கண்டுக்குள் கொண்டு வரும் இந்த கீரை.
பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதில், இந்த கீரையின் பங்கு அபரிமிதமானது. பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தந்தால், பால் உற்பத்தி பெருகும்.
அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தந்தாலும் பால் சுரக்கும். வயிறு உபாதைகள் இருப்பவர்கள், இந்த வெந்தயக்கீரையை வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
குறைந்த கலோரிகள் உள்ளதால், இந்த கீரையை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பயன்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
தீபாவளி இனிப்பு.. அஞ்சீர் கட்லெட் செய்வது எப்படி?
40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை நோய் கட்டுப்படும்.. நரம்பு கோளாறுகளும் தீரமும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிடக்கூடிய கீரையா இந்த வெந்தயக்கீரை உள்ளது. இதனால் குடல் புண்களும் ஆறும்.
தேவையானவை:
வெந்தயக்கீரை – ஒரு கட்டு,
இட்லி மாவு – 250 கிராம்,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்,
எண்ணெய் – 100 மில்லி,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காய த்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, பணியாரக் கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு:
இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன். வெந்தயக் கீரையில் சாம்பாரும் செய்யலாம்.