உணவில் தினமும் நெய் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவியாக உள்ளது.
ஆனால் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிகளவில் நெய் சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறப்படுகிறது. பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளின் முக்கியமானதாக உள்ளது நெய்.
நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும். இதோடு உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இது குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், வெண்ணெய்யை விட உருக்கிய சுத்தமான பசு நெய் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிமானிக்கும் திறன் உள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
உங்களது உணவில் நீங்கள் நெய் சேர்த்துக் கொள்ளும் போது ஏராளமான நன்மைகளை நீங்கள் அடைவீர்கள்.
குறிப்பாக காலையில் சாப்பிடும் உணவில் சிறிதளவு நெய் ஊற்றி சாப்பிடும் போது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது.
சரி இனி உளுத்தம் பருப்பு பயன்படுத்தி சுவையான நெய் வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
என்னென்ன தேவை?
முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, களைந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கிரைண்டரில் பந்து பந்தாக மாவு பூத்து வரும் வரை அரைத்து எடுக்கவும்.
இதனுடன் உப்பு, பெருங்காயத் தூள், மிளகு, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் மாவைச் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித் தெடுக்கவும்.
குறிப்பு :
உளுத்தம் பருப்பு கல்லீரல் பாதுகாப்பு மற்றும் சிறுநீரக பாதுகாப்பு பண்புகளை காட்டலாம். இந்த பண்புகள் யூராடில் உள்ள பீனாலிக்ஸ், டானின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைடிக் அமிலம் போன்ற கூறுகளால் இருக்கலாம்.
இந்த கூறுகள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் ஒரு பாதுகாப்பு விளைவைக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும்.