பச்சை வேர்க்கடலை பிரியாணி செய்வது எப்படி?





பச்சை வேர்க்கடலை பிரியாணி செய்வது எப்படி?

0
வேர்க்கடலை பல்வேறு உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருள். சிலர் அவற்றை சிற்றுண்டிகளாக உட்கொள்கிறார்கள், சிலர் தெருக்களிலும் கடற்கரைகளிலும் விற்கிறார்கள். 
பச்சை வேர்க்கடலை பிரியாணி
உற்பத்தியாளர்கள் அவற்றை வேர்க்கடலை வெண்ணெய், எண்ணெய் மற்றும் இனிப்பு அல்லது உப்புப் பட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். 

வேர்க்கடலை சாஸ்கள் மற்றும் வறுத்த வேர்க்கடலை ஆகியவை பிரபலமான தயாரிப்புகளாகும்.  நீங்கள் பச்சையாகவோ, வறுத்ததாகவோ அல்லது ஊற வைத்ததாகவோ உட்கொண்டாலும், அவை மிகவும் நன்மை பயக்கும். 
அவை புரதம், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. 

இதய நோய் ஆண்கள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சினை. உணவு முறை இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. வேர்க்கடலை உள்ளிட்ட சில உணவுகள் ஆபத்து காரணிகளைக் குறைக்கும்.

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,

பச்சை வேர்க்கடலை - ஒரு கப் (ஊற வைக்கவும்),

தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

கொத்த மல்லித் தழை - சிறிதளவு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

குடமிளகாய் - பாதியளவு,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து... 

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து, தேங்காய்த் துருவல், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது,
மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... மூன்றரை கப் நீர், உப்பு, அரிசி, ஊறவைத்த வேர்க்கடலை சேர்த்து எல்லா வற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடவும். 

ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளி யேறியதும் கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக் கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)