மூலிகைகள், காய்கறிகள், கீரை வகைகள் என விதவிதமான சூப்கள் தயாரிக்கலாம். பொதுவாக, சூப் பசியைத் தூண்டக் கூடியது.
ஒரு வேளைக் கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும்.
ஆரோக்கி யத்தை விரும்புபவர் களுக்கு மூலிகை சூப், குழந்தை களுக்குப் பிடித்த சத்தான கார்ன் சூப் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக் கூடிய சூப் வகைகளைச் செய்து கொடுக்கலாம்.
உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம்.
மூலப் பிரச்சனை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், உப்பு, வெண்ணெய் போன்ற வற்றை மிகவும் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.
சிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம்.