மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங் ரெசிபி செய்வது எப்படி?





மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங் ரெசிபி செய்வது எப்படி?

0
சீஸ் என்னும் பாலாடைக்கட்டியை உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஒரு பிரபலமான மற்றும் சுவையான உணவுப் பொருளாகும். 
மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங் ரெசிபி செய்வது எப்படி?
தோசை, பீட்சா என திரும்பும் திசையெல்லாம் இப்போது சீஸ் தூவ ஆரம்பித்து விட்டனர். அந்தளவிற்கு உணவுப் பிரியர்களின் விருப்பமாக இருக்கும். 

பாலாடைக்கட்டி லேசான கிரீமி முதல் கசப்பானது வரை என பல்வேறு வகையான சுவைகளில் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. 

அதன் மாறுபட்ட சுவை தன்மையின் அடிப்படையில், பல சமையல் உணவு தயாரிப்புகளின் கூடுதல் சுவைக்காக இது சேர்க்கப் படுகிறது. 
கால்சியம், புரதம், வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களுக்கு சீஸ் ஒரு நல்ல உணவாகும். எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் ஒட்டு மொத்த நல்வாழ்வுக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியம். 

மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் மாம்பழம், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மில்க் கேக் செய்யலாம். 
இந்த சீஸ் புட்டிங் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங்கை செய்யலாம்.

என்னென்ன தேவை?
மாம்பழம் நறுக்கியது - 4 கப் (பங்கனப் பள்ளி அல்லது சதை நிறைந்த மாம்பழம்), கேக் - 1/2 கிலோ,

கிரீம் - 1/4 கிலோ,

குளிர்ந்த பால் - 1 கப்,

பொடித்த சர்க்கரை - 1 கப்,

மாம்பழ எசென்ஸ் அல்லது வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.

கேக் செய்ய...

கன்டன்ஸ்டு மில்க் - 1 டின்,

மைதா - 1/4 கிலோ,

சர்க்கரை - 60 கிராம்,

வெண்ணெய் -100 கிராம்,

மாம்பழ எசென்ஸ் அல்லது வெனிலா எசென்ஸ் -2 டீஸ்பூன் (மேற்கண்ட எல்லா வற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்).

மைதா - 1/4 கிலோ,

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்,

சோடா உப்பு - 1 டீஸ்பூன்,

பால் - 2 கப்.

இவை யெல்லா வற்றையும் சேர்த்து சலித்து அடித்து வைத்துள்ள கலவையுடன் கலந்து 2 கப் சூடான பால் ஊற்றிக் கலந்து (விழுது பதம் வர வேண்டும்). பின் கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி 180 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பேக் செய்யவும்.

எப்படிச் செய்வது?
மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங் ரெசிபி
குளிர்ந்த பாலில் சிறிதளவு கிரீம் சேர்த்துக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை கலந்து கெட்டியாக அடித்துக் கொள்ளவும். 

பின் எசென்ஸ் சேர்க்கவும். கேக்கை ஸ்லைஸ் களாக வெட்டவும். மாம்பழ தோலைச் சீவி, சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டவும். 

ஒரு 2 இஞ்ச் கண்ணாடி புட்டிங் பாத்திரம் அல்லது ஃபேன்ஸி டிரேயிலும் செட் செய்யலாம். முதலில் கேக் ஸ்லைஸில் ஒன்றைக் கீழே பரத்தி அதன் மேல் சிறிது பால் தெளிக்கவும்.
இப்போது கிரீமை மேலே தடவி, (சுமார் 1/4 இஞ்ச் உயரம் இருக்கலாம்). நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மேலே தூவவும்.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும், கேக் அதன் மேல் கிரீம் அதன் மேல் பழத் துண்டுகள் என்று அடுக்கி, மேலே நான்கு புறமும் கிரீம் தடவி, பழத்துண்டு களால் அலங்கரித்து,

ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஸ்லைஸ் களாக வெட்டி ஜில்லென்று பரிமாறவும். கோடை காலத்திற்கு ஏற்ற சூப்பர் புட்டிங் இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)