தமிழ் நாட்டில் பரோட்டா பிடிக்காத மனிதர்கள் யாரேனும் உண்டா என்றால் இல்லை என்பதே என்னுடைய அனுமானம். பரோட்டாவிற்கு பூர்வீகம் எது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை அல்லது எனக்கு தெரியவில்லை.
கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகி விடும். ஆனால், மைதா அப்படிப் பட்டதல்ல.
நாம் பரோட்டாவை அதிகளவு சாப்பிட்டால்., பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது.
பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து., உடலுக்கு சோர்வை அதிகரிக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மனதில் இருக்க வேண்டும்.
சரி, இப்போது பன்னீர் கொண்டு அற்புதமான டேஸ்டில் புதினா பரோட்டா செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையானவை :
மைதா மாவு 4 கப்
புதினா 2 கப்
பச்சை மிளகாய் 4
சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி
நெய் 1 மேஜைக் கரண்டி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
செய்முறை :
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். புதினாவை நறுக்கிக் கொள்ளவும்.
மைதாமாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர், புதினா, அரைத்த பச்சை மிளகாய், நெய், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் இவற்றை கலந்து, சற்று தளர்த்தி யாக பிசைந்து,
3 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து மூடி 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன்பின், மாவை உருண்டைகளாக செய்து பூரிப்பலகை மீது வைத்து விரல்களால் தட்டி, பலகை அளவு இழுத்து விரிக்கவும்.
விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாக தட்டிக் கொள்ளவும். தோசைக் கல்லில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும்.
சுற்றிலும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுக்கவும்.
இது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரித்து, பரிமாறவும்.