ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் பிரியாணி செய்வது எப்படி?





ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் பிரியாணி செய்வது எப்படி?

0
ரம்ஜான் உணவுகளைப் பற்றிப் பார்க்கும் போது பிரியாணியை விட்டு விட்டால், அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் தீர்க்க முடியாமல் போய் விடும். 
ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி

அதனால் இஸ்லாமியரின் ஸ்டார் ஃபுட்டான மொகல் பிரியாணியை எப்படி செய்வது எனக் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ,

பாஸ்மதி அரிசி – 2 கப்,

தயிர் – 1 கப்,

வெங்காயம் – 2 (நறுக்கியது),

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது),

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்,

மல்லி தூள் – 1 டீஸ்பூன்,

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,

பட்டை – 1,

மிளகு – 6,

கிராம்பு – 4,

ஏலக்காய் – 4,

பிரியாணி இலை – 1,

குங்குமப்பூ – 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது),

முந்திரி – 10,

உலர் திராட்சை – 10,

நெய் – 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:

மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். 
மொகல் பிரியாணி

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும். ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம், வதக்க வேண்டும். 

அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவாக வைத்து வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும். 
பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து தீயை குறைவாக வைத்து வதக்வும். அரிசியை கழுவி குக்கரில் போட்டு, 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும். 

கிரேவி போல வெந்திருக்கும் அதனை, குக்கரில் உள்ள அரிசியுடன் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்து விட்டால், அதன் மேல் குங்கும பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)