உஷ்ணம் நீக்கும் கேப்பை கூழ் !





உஷ்ணம் நீக்கும் கேப்பை கூழ் !

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப் படுகிறது.
உஷ்ணம் நீக்கும் கேப்பை

மலைப் பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. 

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக் கூடியது மாகும்.
இவ்வகை சிறு தானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயி லிருந்து காப்பாற்றக் கூடியவை. 

இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறு தானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானி யங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன.

மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமான மடைவதுடன் மற்ற சத்துக் களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக் கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. 

இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கி யமான உணவுகளில் இன்றியமை யாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப் படுகிறது. 

இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப் படுகிறது.

இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டு களுக்கு முன் பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் விளையும் சிறு தானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். 

அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள் ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தை களுக்கு இது அற்புதமான உணவு. 
உடலுக்கு வலிமை தரும் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போ ஹைட்ரேட் உள்ளன. 

இது தவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச் சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

எனவே, தான் ராகியை பழங்காலந் தொட்டு முளைக் கட்டி சிறு குழந்தை களுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறை யில் உள்ளது. 
அற்புதமான உணவு

இது போன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்ட தாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப் பாளிகளாக வும் திடகாத்திர மானவர்களா கவும், திகழ்ந்து வந்துள்ளனர். 

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக் கொள்ளும்.
அதனால் பசி குறைவா எடுக்கும். உஷ்ணத்தை குறைக்கும் ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர்.

இதய நோயுள்ள வர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தை களுக்கு இது அற்புதமான உணவு.

 இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்துவ தால் நீரிழிவு நோயாளி களுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.
Tags: