ஸ்பினாச் அண்ட் ஃபெடா க்ரீப்ஸ் ரெசிபி செய்வது எப்படி?





ஸ்பினாச் அண்ட் ஃபெடா க்ரீப்ஸ் ரெசிபி செய்வது எப்படி?

0
பல்வேறு விதமான சூப்பர்ஃபுட்களில் கீரை வகைகளுக்கு தனி இடம் உண்டு. கண்ணை கவரக்கூடிய நிறம் மற்றும் அற்புதமான சுவையுடன் கீரைகள் ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்குகின்றன. 
ஸ்பினாச் அண்ட் ஃபெடா க்ரீப்ஸ் ரெசிபி
ஆனால் கீரைகளை தினமும் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.

கீரைகளில் வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலேட், இரும்பு சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. 

கீரைகளை தினமும் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு கீரைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. 
கீரை வகைகளில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் நமது செல்களுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தடுக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்களுக்கான அபாயம் குறைகிறது.

ஞாயிற்று கிழமைகளில் பொழுது போக்காக செய்து சாப்பிடலாம். இதில் கீரை சேர்க்கப் படுவதால் ஆரோக்கியம் மற்றும் ஊட்டசத்துக்கள் நிறைத்தி ருக்கிறது.

சரி இனி கீரை பயன்படுத்தி ஸ்பினாச் அண்ட் ஃபெடா க்ரீப்ஸ் ரெசிபி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள்

க்ரீப்ஸ் தயாரிக்க:

1/4 கப் பால்

1/2 கப் மாவு

1/3 கப் தண்ணீர்

1/8 கப் வெண்ணெய், உருகிய

1 தேக்கரண்டி தேன்

ஒரு சிட்டிகை உப்பு

1 மேஜைக் கரண்டி எண்ணெய்

வெண்ணெய்

ஃபில்லிங்:

200 கிராம் கீரை, நறுக்கப்பட்ட

150 கிராம் ஃபெடா சீஸ்

100 கிராம் க்ரீக் யோகர்ட்

2 மேஜைக் கரண்டி தேன்

எப்படி செய்வது 
மேற்கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். காற்று, கட்டி இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும். இதனை காற்று புகாதவாறு மூடி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.

ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவவும். இதில் இரண்டு மேஜைக் கரண்டி கலந்து வைத்த மாவை ஊற்றி தோசை பதத்திற்கு வார்த்து எடுக்கவும்.
கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !
அந்த மாவின் மேல் கீரை மற்றும் சீஸ் கலவையை வைக்கவும். பாதியாக மூடி வேக வைக்கவும். பின் அதன் ஓரங்களில் வெண்ணெய் தடவி முறுகலாக சுட்டு எடுக்கவும்.

வெந்த பின் அதில் க்ரீக் யோகர்ட்டை மேலே வைத்து தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)