பல்வேறு விதமான சூப்பர் ஃபுட்களில் கீரை வகைகளுக்கு தனி இடம் உண்டு. கண்ணை கவரக்கூடிய நிறம் மற்றும் அற்புதமான சுவையுடன் கீரைகள் ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்குகின்றன.
ஆனால் கீரைகளை தினமும் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.
கீரைகளில் வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலேட், இரும்பு சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது.
கீரைகளை தினமும் சாப்பிடுவது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு கீரைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
சரி இனி முளைக்கீரை பயன்படுத்தி டேஸ்டியான கீரை பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
பச்சரிசி - 2 கப்,
ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,
துருவிய தேங்காய், கொத்த மல்லித் தழை - தலா கால் கப்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
உடைத்த முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
கடைகளில் கிடைக்கும் மசாலா
வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
செய்முறை:
பச்சரியை வெறும் வாணலியில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, மூன்றரை கப் நீர் விட்டு உதிர் உதிராக வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்த மல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்த மல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்.
இதை நீர் விடாமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை வறுத்து...
முந்திரிப் பருப்பு, மசாலா வேர்க் கடலை சேர்த்துக் கிளறி... அரைத்த கீரை, உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்து விடவும்.
உதிர் உதிராக வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறி விடவும்.
குறிப்பு: முளைக்கீரைக்குப் பதில் அரைக்கீரை, சிறுகீரை சேர்க்கலாம்.