வால்நட்ஸ் வாழைப்பழ கேக் ரெசிபி செய்வது எப்படி?





வால்நட்ஸ் வாழைப்பழ கேக் ரெசிபி செய்வது எப்படி?

0
வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. 
வால்நட்ஸ் வாழைப்பழ கேக் ரெசிபி செய்வது எப்படி?
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். 

ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போ ஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. 

அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. 

தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. 

என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கப்,

வாழைப் பழம் - 1,

பேக்கிங் பவுடர், சமையல் சோடா - தலா அரை டீஸ்பூன்,

வால்நட்ஸ் - கால் கப்,

பொடித்த சர்க்கரை - கால் கப்,

பிரவுன் சுகர் - 1 டேபிள் ஸ்பூன் (பெரிய கடைகளில் கிடைக்கும்),

பால் - அரை கப்,

வெண்ணிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

உருக்கிய வெண்ணெய் - அரை கப்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
சேலஞ்சிற்கு மறுத்த நபரின் வங்கி கணக்கை வெளியிட்டு மிரட்டிய மோமோ !
எப்படிச் செய்வது?
வால்நட்ஸ் வாழைப்பழ கேக் ரெசிபி
மைதா மாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை நன்றாக சலிக்கவும். வெண்ணெய் மற்றும் இரண்டு வித சர்க்கரையை யும் சேர்த்து பொங்கி வரும் வரை ஒரே பக்கமாய் கலக்கி அடிக்கவும்.

இத்துடன் சலித்த மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இது நன்றாக கலந்து வரும்போது வாழைப் பழத்தை குழைத்து கலவையில் சேர்க்கவும்.
ஓட்டலில் 102 நாள் தங்கி விட்டு பில் கட்டாமல் எஸ்கேப் ஆன நபர் !
இத்துடன் எண்ணெய், பால், எசென்ஸ் சேர்க்கவும். ஏலக்காய், வால் நட்ஸை உடைத்து சிறிது மைதா தூவி கலந்து

கேக் கலவையில் சேர்த்து வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் கொட்டி பேக் செய்து எடுக்கவும். வால் நட்ஸ் கொண்டு அலங்கரிக் கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)