பனீர் என்பது இந்திய துணைக் கண்டத்தில் பாரம்பரிய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான வகை சீஸ் ஆகும்.
அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு புரதச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்ய பல உணவுகள் உள்ளன. ஆனால், சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த சாய்ஸ் குறைவு.
அந்த வகையில் பனீர் அவர்களுக்கான புரதத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆகச் சிறந்த உணவாக இருக்கும். தினமும் பனீர் சாப்பிடலாம், தவறில்லை.
பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன்பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது.
மேலும் டைப்-2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது.
சோளத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இது செல் உருவாக்கத்தில் தொடங்கி உடலின் அனைத்து முக்கிய செயல் முறைகளையும் ஊக்குவிக்கிறது.
ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளிலும் ஸ்வீட் கார்ன் மிகவும் நன்மை பயக்கும்.
ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போஹைட்ரேட், வளர்சிதை மாற்றம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
ஸ்வீட் கார்னில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,
பிஞ்சு சோளம் – 1, பட்டாணி – கால் கப்,
பொடியாக நறுக்கிய பனீர் – கால் கப்,
பச்சை மிளகாய் – 1,
பூண்டு (விருப்பப் பட்டால்) – ஒரு பல்,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சோளத்தை உதிர்த்துக் கொள்ளுங்கள். சோள மணி களையும் பட்டாணியை யும் வேக வையுங்கள். பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள்.
வேக வைத்த சோளம், பட்டாணிக் கலவையுடன் பச்சை மிளகாய், பூண்டு, பனீர் துருவல், மிளகுத் தூள், உப்பு சேர்த்து தயிரையும் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
குழந்தைகளு க்குக் கொடுக்க ஏற்ற சத்தான தயிர்பச்சடி இது.