நெல்லிக்காய் பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?





நெல்லிக்காய் பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?

ஆயுர்வேதத்தின்படி, சருமத்தை பளபளவென வைத்துக் கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வை மேம்படவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. 
நெல்லிக்காய் பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?
நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும் உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப் படுத்துவதால், சர்க்கரை வியாதிக்கும் நன்மருந்தாக உள்ளது. 

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். 

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. 
உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். 

உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். உங்கள் சுவையை தூண்டும் நெல்லிக்காய் பிரியாணி சமையல்... 

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான நெல்லிக்காய் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க !

சமைக்க தேவையானவை

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் - கால் கப்

பச்சை மிளகாய் – 3

கொத்த மல்லித் தழை – சிறிதளவு

பாசுமதி அரிசி - ஒன்றரை கப்

வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

பெரிய நெல்லிக்காய் – 12

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, 3 கப் நீர் சேர்த்து உதிர் உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும். நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவவும் (கொட்டையை நீக்கி விடவும்).

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, வேர்க்கடலை சேர்த்து, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்த்து இறக்கி விடவும்.
வெந்த சாதத்தை வதக்கிய கலவையில் சேர்த்துப் புரட்டி உதிர் உதிராகக் கிளறவும். கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும் நெல்லிக்காய் பிரியாணி தயார் .
Tags: