ருசியான பஜ்ரா கிச்சடி செய்வது எப்படி?





ருசியான பஜ்ரா கிச்சடி செய்வது எப்படி?

0
சமீப காலமாக சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. சிறு தானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை. 

ருசியான பஜ்ரா கிச்சடி செய்வது எப்படி?
இத்தகைய சிறுதானியங்களில் கம்பு முக்கியமானது. கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளது. 

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 
எனவே, கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அவுல் என ஏதேனும்ஒரு வழி முறைகளில் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து கொள்வது அவசியம். 

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடையை  கட்டுக்குள் வைக்கும்.

எனவே உடல் உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் தினசரி விழி கம்பு சேர்த்து கொள்வது நல்லது. அவசர அவசரமாக காலையில் உணவை சமைத்து விட்டு வேலைக்கு செல்வோருக்கான அட்டகாசமான ரெசிபி தான் இந்த பஜ்ரா கிச்சடி. 

இதனை மிக எளிதாக செய்து விடலாம். இந்த கிச்சடி செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. அதே சமயம் ருசியும் படுதூளாக இருக்கும். 

மேலும் இந்த கிச்சடி  ரெசிபியை தாராளமாக நீங்கள் மதிய உணவிற்கு கூட தயாரித்து சாப்பிடலாம். சுவையான இந்த பஜ்ரா கிச்சடி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

சங்குகளின் கூடுகளுக்குள் உயிர் வாழும் சந்நியாசி நண்டு !

தேவையான பொருட்கள்:
கம்பு – ஒரு கப்,

பச்சைப் பயறு – அரை கப்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

லவங்கம் – 2,

துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2,

கறிவேப்பிலை – சிறிதளவு,

நெய் – 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
ருசியான பஜ்ரா கிச்சடி செய்வது எப்படி?
சுத்தம் செய்த கம்பு, பச்சைப் பயறு இரண்டையும் வெறும் வாணலி யில் வறுத்துக் கொள்ளவும். தேவையான நீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்க ரில் வைத்து குழைய வேக விடவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி, சீரகம், லவங்கம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளித்து, வேக வைத்த கம்பு – பச்சைப் பயறு கலவையில் சேர்க்கவும். 

தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)