சுவையான பீட்ரூட் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





சுவையான பீட்ரூட் துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

0
பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
பீட்ரூட் துவையல் செய்வது
பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். சுவையும் கூடும். பச்சையாக பீட்ரூட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கியும் அதில் எலுமிச்சை சாறில் தொட்டும் சாப்பிடலாம். 

சருமத்தில் தீக்காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால், சருமத்தில் புண், கொப்புளங்கள் ஆகியவை உண்டாகும். அது அதிக எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும். 
அப்படி ஏற்படும் தீக்காயங்கள் கொப்புளங்களாக மாறாமல் இருக்கவும் காயங்கள் எரிச்சலையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்காக பீட்ரூட்டைப் பயன்படுத்தலாம். 

தீக்காயம் பட்ட இடங்களில் பீட்ரூட் சாறினை தடவி வந்தால் அது காயம் பட்ட இடங்களில் கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் 1

சின்ன வெங்காயம் 200 கிராம் or பெரிய வெங்காயம் 1

வர மிளகாய் 5

தனியா 1 மேசை கரண்டி

சீரகம் 1 மேசைகரண்டி

தேங்காய் 2 கீற்று

கறிவேப்பில்லை சிறிது

புளி – 2 புளிக்கொட்டை அளவு

ஆயில் 2 மேசை கரண்டி

உப்பு தேவையான அளவு .
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், கறிவேப்பில்லை போட்டு ஆயில் விட்டு வதக்கவும்.

வதங்கிய பிறகு பீட்ரூட்டை சேர்க்கவும். நன்கு வதக்கவும். இப்போது தேங்காய், புளி ,உப்பு சேர்த்து வதக்கவும்.

2 நிமிடம் வதங்கியதும் இறக்கி ஆற வைக்கவும் .ஆறியவுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

குறிப்பு :

குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக் கூடாது. இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

ஆனால், இயற்கையாகவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடிக்கக் கூடாது.
பீட்ரூட் சாறு இரத்த நாளங்களை திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் உடல் முழுவதும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது உங்களை அதிக ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் உணர வைக்கிறது. 

இதனால் தான் உறக்கத்தில் உள்ள உங்கள் உறுப்புகள் விழித்தெழுவதற்கு பீட்ரூட் ஜூஸை காலையில் குடிப்பது நல்லது.

Post a Comment

0Comments

Post a Comment (0)