பிரண்டை வேர் மற்றும் தண்டுப் பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக் கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.
அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபகசக்தியை பெருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தும். எலும்புகளுக்கு சக்தி தரும்.
ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக் கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப் படுவார்கள்.
மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக் கொள்ளும்.
இதனால் பாதிக்கப் பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப் படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
சரி இனி பிரண்டை கொண்டு அசத்தலான பிரண்டை இலை துவையல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும். அடுத்து அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.
வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.
அனைத்தும் அரை பட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.