காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது.
அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள் பிரெட்.
சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு.
உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும்.
சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும்.
அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டுமே இருக்கும்.
கார்போ ஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும் போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம்.
உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம். சரி இனி பிரெட் துண்டுகள் பயன்படுத்தி டேஸ்டியான பிரெட் கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
வாக்கிங்... ஜாகிங்... தவறுகள் தவிர்க்கும் வழிகள் !
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 6,
இஞ்சி - சிறிய துண்டு,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 1,
பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட்,
கொத்தமல்லி- சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி... தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும்.
பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லா வற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.
சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.