சுவையான பிரெட் ஸ்பிரிங் ரோல் செய்வது எப்படி?





சுவையான பிரெட் ஸ்பிரிங் ரோல் செய்வது எப்படி?

0
காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. 
பிரெட் ஸ்பிரிங் ரோல் செய்வது
அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட். 

சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு. 
பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும். 

பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர். உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். 

சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். 

அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டுமே இருக்கும். 

தேவையானவை:

மைதா மாவு - 100 கிராம்,

பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத் தாள்), வெங்காயம் - சிறிதளவு, 

குடமிளகாய் - சிறிதளவு, 

கேரட் துருவல் - சிறிதளவு,

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

பிரெட் தூள் - 100 கிராம்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:


கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். 

இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடு க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)