புழுங்கல் அரிசி என்பது உமியை ஊறவைத்து வேக வைத்து உலர்த்தப்பட்ட அரிசியாகும். அரிசி தானியத்தின் வெளிப்புற அடுக்கில் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் மற்றும் தாதுக்களின் குறிப்பிடத்தக்க பகுதி எண்டோஸ்பெர்மில் நொறுங்குகிறது.
எனவே, வேக வைத்த அரிசி தீவிர நிலை அரைத்த பிறகும் அதன் ஊட்டச்சத்துக்களை இழக்காது.
கூடுதலாக, இது வெப்பத்தின் காரணமாக கடினமாகி, பூச்சி தாக்குதலை எதிர்க்கும் திறன் பெறுவதால் நீண்ட நாள் சேமிப்பிற்கு மிகவும் பொருத்தமானது.
புழுங்கல் அரிசி இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது பச்சை அரிசியுடன் ஒப்பிடும் போது, வேக வைத்த அரிசியில் குறைவான கலோரிகள், குறைவான கார்போ ஹைட்ரேட்டுகள், அதிக நார்ச்சத்து மற்றும் அதிக புரதம் உள்ளது.
இது ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. செரிக்க எளிதான புழுங்கல் அரிசி முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றது. இது மொறு மொறுப்பாக இல்லாது சற்றே தடிமனாக பான்கேக் போல தோசைக் கல்லில் நேரடியாக சுடப்படுகிறது.
பொதுவாக இதன் மேலாக பொடியாக நறுக்கப்பட்ட தக்காளி அல்லது வெங்காயம் - மிளகாய் தூவப்படுகிறது. மற்ற வழமையான மேல் தூவல்களாக தேங்காய் துருவல், காய்களின் கலவை இருக்கின்றன.
இது பொதுவாக சாம்பார், சட்னியுடன் எடுத்துக் கொள்ளப் படுகிறது. காலை உணவாகும். தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாக நடைமுறையில் உள்ளது.
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10,
புழுங்கல் அரிசி - 150 கிராம்,
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி,
வெங்காயம், கேரட்,
பச்சை மிளகாய் - தலா 1,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேரட்டை துருவவும். அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் பிரெட் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை வதக்கி... உப்பு சேர்த்து, மாவில் கலக்கவும்.
தோசைக் கல்லை காய வைத்து மாவை சிறு ஊத்தப் பமாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.