டேஸ்டியான பிரெட் வடை செய்வது எப்படி? #Vadai





டேஸ்டியான பிரெட் வடை செய்வது எப்படி? #Vadai

0
பிரட்டில் உள்ள மிக எளிமையான கார்போ ஹைட்ரேட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
டேஸ்டியான பிரெட் வடை செய்வது எப்படி?
எனவே, காலையில் வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். முதலில் சிறிது சிறிதாக சாப்பிடுங்கள், பிறகு காலை உணவில் கோதுமை ரொட்டிகளை சேர்க்கலாம்.

ஒயிட் பிரட்டில் மிக அதிக அளவில் சோடியம் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு குறிப்பாக சிறுநீரகத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

அதனால் பிரெட் லைட்டான உணவு தானே என்று நினைத்து நிறைய சாப்பிட்டு விடுவோம். அதனால் நாம் சாப்பிடும் பிரட்டின் அளவை கவனிப்பது மிக முக்கியம்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
முடிந்தவரையில் காலையில் முழு கோதுமை பிரட் (whole wheat bread) ஆகியவற்றுடன் பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளவாம். 

ஆனால் காலையில் பிரட் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பால் அல்லது பழங்கள் என ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் பிரட் எடுத்துக் கொள்ளவே கூடாது. 

சரி இனி பிரெட் துண்டுகள் பயன்படுத்தி டேஸ்டியான பிரெட் வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 6,

உளுத்தம் பருப்பு - 100 கிராம்,

வெங்காயம் - 2, 

இஞ்சி - சிறு துண்டு,

பச்சை மிளகாய் - 1,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரெட் வடை செய்வது
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு :

நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்துபோகாமல், ஆற்றல் தருவதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது. 

உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து என்பது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது. 

சுவை மட்டுமின்றி உளுத்தம் பருப்பில் பல நன்மைகள் அடங்கி யுள்ளன. உளுந்தில்  பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. 200 கிராம் உளுந்தில் ஏறத்தாழ 1500 மி.கி பொட்டாசியம் சத்து உள்ளது. 
பாசிட்டிவாக சிந்தித்தால் வலி குறையும் !
உப்பு  உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் சத்து உதவுகிறது. உளுந்து 43 என்ற மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. 

எனவே, அவை உடனடியாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. மேலும், உளுந்தில் அதிக அளவு ஆன்டி- ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. 

இவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)