சுவையான அவரைக்காய் கூட்டு செய்வது எப்படி? #Koottu





சுவையான அவரைக்காய் கூட்டு செய்வது எப்படி? #Koottu

தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். 
சுவையான அவரைக்காய் கூட்டு செய்வது எப்படி?
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும். வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 
அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

அவரைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால், உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும். 

பித்தத்தினால்  உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இத் ரத்தத்தைச் சுத்தபடுத்தும். 

ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப் போதல்  போன்றவை கட்டுப்படும்.
என்னென்ன தேவை?

அவரைக்காய் - 1 கப்

பாசிப் பருப்பு -1/3 கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கு

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

அரைக்க...

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 2

மிளகு - சிறிது

சீரகம் - 1/4 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி

பெரிய மார்பகம் பெற தேங்காய் பால் பருகுங்கள்... வீடியோ !

எப்படிச் செய்வது?
அவரைக்காய் கூட்டு செய்வது
கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி வைக்கவும். இவற்றை ஜாரில் எடுத்து மசித்து வைக்கவும்.

குக்கரில் அவரைக்காய், பாசிப் பருப்பு எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் 3/4 கப் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, சமைத்து வைத்துள்ள பருப்பு கலவையை ஊற்றி அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வெந்த பின் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.