புரோக்கோலி, இதை மார்க்கெட்டிலும், கடைகளில் பார்த்திருப்போம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருப்போம். ஆனால் இதில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.
புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், அதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டி ஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப் படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன.
அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
தேவையானவை:
நறுக்கிய புரோக்கோலித் துண்டுகள் - ஒரு கப்
பூண்டு - 8-10 பல்
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் - ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி கழுவிய நீர் - 4 கப்
கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு
வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
ஆரிகானோ அல்லது காய்ந்த துளசி இலை - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)
பட்டை - கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன்
சிறுதானிய மாவு - ஒரு டீஸ்பூன்
இந்துப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை:
குக்கரில் புரோக்கோலி யுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை, புதினா, வெங்காயத் தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ, பட்டை - கிராம்புத் தூள், சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லித் தழை சேர்த்துச் சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப் பருகலாம்.
விருப்பப் பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச் சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்:
எடையைக் குறைக்கவும், உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.