டேஸ்டியான கேப்ஸிகம் சட்னி செய்வது எப்படி?





டேஸ்டியான கேப்ஸிகம் சட்னி செய்வது எப்படி?

0
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் குடைமிளகாய்  பயன்படுத்தப் படுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. 

டேஸ்டியான கேப்ஸிகம் சட்னி செய்வது எப்படி?
குடைமிளகாய் பீட்டா - கிரிப்டோக்சாண்டின், ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகளின் சிறந்த ஆதாரமாகும்.  குடை மிளகாயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 

இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவுகளுடன் குடை மிளகாயையும் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பது மிகவும் சுலபமாகி விடும். 
மேலும் இதில் உள்ள வைட்டமின் B6 வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு நன்மை தரும். சிவப்பு குடமிளகாயில் உள்ள லைக்கோபின் எனும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. 

குடைமிளகாய் ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6  இன் சிறந்த ஆதாரம் ஆகும். இதில் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ஸ்களும் உள்ளன. 

இவை இதய நோய்களின் ஆபத்தை கணிசமாக குறைக்கின்றன. குடை மிளகாயில் உள்ள பண்புகள் கண் பார்வையை மேம்படுத்த உதவுகின்றன. 

மேலும் இதில் நிறைந்துள்ள லூடீன் மற்றும் ஜியாக்சாண்டின் விழித்திரையை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கரோட்டினாய்டு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கண்களை மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. 

சரி இனி சிவப்பு கேப்ஸிகம் பயன்படுத்தி டேஸ்டியான கேப்ஸிகம் சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை . : 

சிவப்பு கேப்ஸிகம் - 2 அல்லது 3

எண்ணெய் - 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

உறித்த சின்ன வெங்காயம் - ஒரு கப்

தக்காளிப் பழம் - 2

ருசிக்கு உப்பு

தாளிக்க கடுகு - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :
டேஸ்டியான கேப்ஸிகம் சட்னி செய்வது எப்படி?
காய் வகைகளை சிறிய துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத் தெடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகை வெடிக்க விட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். 
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
சற்று கெட்டி யானவுடன் இறக்கி உப்பைக் கலந்து உபயோகிக் கவும்.கலர் மாறாமலிருக்க உப்பைக் கடைசியில் சேர்க்கிரோம். இதுவும் எல்லா வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியானது தான்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)