டேஸ்டியான சீஸ் பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான சீஸ் பிரியாணி செய்வது எப்படி?

சீஸ் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ப்ளூ சிஸ் என்றால் சொல்லவே வேண்டாம். நமது சுவை மொட்டுகளை தூண்டக்கூடிய அற்புதமான சுவை கொண்ட இந்த ப்ளூ சீஸ் பலரது ஃபேவரெட் என்று தான் சொல்ல வேண்டும். 
டேஸ்டியான சீஸ் பிரியாணி செய்வது எப்படி?
தனியாக சாப்பிட்டாலும் சரி அல்லது வேறு சில உணவுகளுடன் சாப்பிட்டாலும் சரி அனைவருக்கும் பிடித்தமானதாக இருப்பது இந்த ப்ளூ சீஸ். 

உலகின் மிகச்சிறந்த சீஸ் பற்றி நாம் பேசும் பொழுது பிரான்ஸ் பற்றி நிச்சயமாக சொல்லியே ஆக வேண்டும். கேமம்பெர்ட், பிரீ மற்றும் ப்ளூ சீஸ் போன்ற பல்வேறு வகையான சீஸ் வகைகளுக்கு நாடு பெயர் போனது. 

ஆனால் நுண்ணுயிரிகளின் வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குழப்பத்தினால் இந்த சீஸ் வகைகள் அழிந்து போக வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் நேஷனல் சென்டர் ஃபார் சயின்டிஃபிக் ரிசர்ச் (National Center for Scientific Research - CNRS) குறிப்பிட்டுள்ளது. 
சீஸ் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சீஸில் அதிக கொழுப்புச் சத்து இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவது நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீஸ் சரியான அளவில் சாப்பிட்டால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.
தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 3,

இஞ்சி – சிறு துண்டு,

பூண்டு – 6 பல்,

துருவிய சீஸ் – அரை கப்,

நெய்யில் வறுத்த முந்திரி,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

எண்ணெய்,

உப்பு,

தேவையான அளவு.

செய்முறை:
சீஸ் பிரியாணி செய்வது
பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். 

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு… காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
Tags: