செட்டிநாடு முட்டை தொக்கு செய்வது எப்படி?





செட்டிநாடு முட்டை தொக்கு செய்வது எப்படி?

0
முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 
செட்டிநாடு முட்டை தொக்கு
உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம். 

அதிலும் காலை உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்யும் நிலையில், அதற்கு தகுந்த உணவாக முட்டை இருக்கிறது. 

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 
இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். 

புரதச்சத்து மிகுதியாக கொண்ட முட்டை சாப்பிட்டால் நம் தசைகள் வலிமை அடையும் மற்றும் உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட தொடங்கும். 
முட்டையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடல் வலிமை பெற உந்து சக்தியாக அமையும் மற்றும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

முட்டை – 4,

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்,

கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்,

பல்லாரி – 1,

தக்காளி – 2,

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்,

கொத்த மல்லித் தழை – சிறிதளவு,

கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

பல்லாரி, தக்காளியை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளளவும். கொத்த மல்லியை பொடியாக நறுக்கவும். முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து 2 ஆக வெட்டி எடுத்து கொள்ளவும். 
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பல்லாரியை போட்டு வதக்கவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். 
அனைவரும் அறிய வேண்டிய மருத்துவக் குறிப்பு !
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், கரம்மசாலா தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். 

தண்ணீர் சுண்டி வரும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, முட்டையை அதில் சேர்த்து உடையாமல் கிளறவும்.

மசாலா நன்றாக வதங்கியதும் கொத்த மல்லித் தழையை தூவி இறக்கவும். இப்போது சுவையான, சூடான முட்டை தொக்கு தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)