பசையம் இல்லாத உணவுகள் தானியங்கள். சிறிய தினையான சாமை ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியது. Panicum sumatrense அல்லது Little millet என்று அழைக்ககூடிய இவை அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாக இருக்கும்.
சைவ உணவு எடுப்பவர்களுக்கு புரதம் நிறைந்த இதை தினசரி ஒரு வேளையேனும் எடுக்கலாம். சாமை எளிதாக ஜீரணிக்க கூடியவை. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப கூடும்.
சர்க்கரை நோய் இன்று பெரும்பாலோரை ஆக்கிரமித்துள்ளது. எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமையை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் செய்கிறது.
பாரம்பரியமான உணவு பழக்கங்களை மேற்கொண்டவர்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் பிரச்சனைகள் அதிகம் இல்லை.
தற்போது ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரபோக்கு, அதிக வலி, உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள்.
போதுமான ஊட்டச்சத்து சரியான முறையில் சேரும் போது மாதவிடாய் கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதோடு கருப்பை ஆரோக்கியமும் வலுப்படும்.
கருப்பை உயிர் சக்தி தந்து பெண்களுக்கு இரத்த சோகை இல்லாமல் செய்வதில் சாமை தனித்துவமானதாக விளங்குகிறது.
புற்றுநோயினைத் தடுக்கும் கேரட் !
சாமை, தேங்காய், எலுமிச்சை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. மிகவும் சிம்பிளாக இந்த சாலட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாமை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நறுக்கப்பட்ட வெங்காயம் - 1/2 கப்
வெள்ளரி - 3 கப்
பர்பில் முட்டைகோஸ் - 1 1/2 கப்
அவகாடோ - 1/2 கப்
ஆரஞ்சு - 4
ஷெல்டு எடாமேம் - 2 கப்
1/2 கப் தேங்காய்
நறுக்கப்பட்ட பாதாம் - 1/4 கப்
மிளகு
ட்ரெஸிங் செய்ய:
ஆரஞ்சு சாறு - 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
நறுக்கப்பட்ட வெங்காயம் - 1/2 கப்
வெள்ளரி - 3 கப்
பர்பில் முட்டைகோஸ் - 1 1/2 கப்
அவகாடோ - 1/2 கப்
ஆரஞ்சு - 4
ஷெல்டு எடாமேம் - 2 கப்
1/2 கப் தேங்காய்
நறுக்கப்பட்ட பாதாம் - 1/4 கப்
மிளகு
ட்ரெஸிங் செய்ய:
ஆரஞ்சு சாறு - 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
ஆப்பிள் சிடர் வினிகர் - 2 மேஜைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
எப்படி செய்வது
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சாமை சேர்த்து வேக விடவும். 12-15 நிமிடங்கள் வரை வேக விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, ஆற வைக்கவும்.
ஒரு சின்ன பௌலில் ட்ரெஸிங் செய்ய எடுத்து வைத்துள்ள வற்றை சேர்த்து கலக்கி வைக்கவும். மேற் கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அரை மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும் அல்லது ஒரு நாள் இரவு முழுக்க வைத்திருக்கலாம்.
ஒரு சின்ன பௌலில் ட்ரெஸிங் செய்ய எடுத்து வைத்துள்ள வற்றை சேர்த்து கலக்கி வைக்கவும். மேற் கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அரை மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும் அல்லது ஒரு நாள் இரவு முழுக்க வைத்திருக்கலாம்.
காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?சாலட்டின் அளவை பொருத்து அதில் எலுமிச்சை சாறு, மூலிகை, ஆரஞ்சு, அவகாடோ ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.