அருமையான வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி? #Koottu





அருமையான வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி? #Koottu

சுமார் 90% தண்ணீரை கொண்டிருப்பதால் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த ஹைட்ரேட் மற்றும் கூலிங்கான உணவாக இருக்கின்றன. சாலட்ஸ், சாண்ட்விச்சஸ் என பல வெரைட்டிகளில் கலந்து சாப்பிட வெள்ளரிகள் நமக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. 
வெள்ளரிக்காய் கூட்டு செய்வது
ஒன்றுமே இல்லா விட்டால் கூட வெள்ளரிக்காயை வெட்டி அதன் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ளன. 
மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிகளில் உள்ளன. 

கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் இருப்பதால் எடை இழப்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு வெள்ளரி பெரிதும் உதவுகிறது. 

வெள்ளரிகள் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும் சில அரிய பக்க விளைவுகளையும் கூடவே கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.?

சில நேரங்களில் நாம் ஆசையாக வெள்ளரியை கடித்து சாப்பிடும் போது சுவையற்றதாகவும், மிகவும் கசப்பதை உணர்ந்திருப்போம். அப்படி நிகழும் நேரத்தில் வெள்ளரியை சாப்பிடும் ஆசையே சட்டென்று போய் விடும். 

சுவையான மற்றும் நீர்ச்சத்து மிக்க வெள்ளரி சில சமயம் ஏன் இப்படி கசக்கிறது என்று நாம் யோசித்திருக்கிறோமா!! இதற்கு காரணம் குக்குர்பிடசின் (cucurbitacin) எனப்படும் ஒரு தனிமம், இது ஒரு ஹை-லெவல் டாக்ஸிக் காம்பவுண்ட் ஆகும். 

வெள்ளரிகளில் உள்ள குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு போன்ற சேர்மங்கள் அவற்றை கசப்பாக்குவதுடன் அபாயகரமான அரிதான அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

பலாக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?

சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெள்ளரிக்காய் கூட்டு. இன்று இந்த கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 3,

பாசிப்பருப்பு - 1 கப்,

தேங்காய் - துருவல் - 4 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 1,

கறிவேப்பிலை - சிறிதளவு,

கடுகு, உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன், 

பெருங்காயத் தூள் - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெள்ளரிக் காயை தோல் சீவி சிறு துண்டு களாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். 

வெள்ளரித் துண்டுகளை உப்பு சேர்த்து வேக விட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். 

அருமையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.