சூப்பரான உலர் மொச்சை பிரியாணி செய்வது எப்படி?





சூப்பரான உலர் மொச்சை பிரியாணி செய்வது எப்படி?

0
நம்முடைய தினசரி பயன்படுத்தும் சமையலில் வித விதமான பயிறு வகைகள் இடம் பெற்றாலும் குளிர் காலங்களில் அதிகமாகக் கிடைப்பது மொச்சைப் பயறு. 
சூப்பரான உலர் மொச்சை பிரியாணி செய்வது எப்படி?
குறிப்பாக பொங்கல் சமயங்களில் இந்த மொச்சைப் பயறை விதவிதமாக சமைத்து சாப்பிடுவார். நாட்டு காய்கறிகளில் முக்கிய இடம் பிடித்த இதில் ஏராளமான ஊட்டச்ச்த்துக்கள் இருக்கின்றன. 

குறிப்பாக பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு மேம்படுத்தக் கூடியது. இந்த மொச்சை பயிறில் உள்ள எல் டோபா பார்கின்சன் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. 

மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.

10,000 ஆண்டுகளுக்கும் மேலாக பல நோய்களை குணப்படுத்த நம்முடைய பாரம்பரிய உணவுமுறையில் எடுத்துக் கொள்ளப்படும் முக்கியப் பொருளாக இருக்கிறது. 

இந்த மொச்சை பயிறு இஸ்ரேலில் தோன்றியது. இது பச்சை நிறமாகவும், அதிகப்படியான இனிப்பு பட்டாணி சுவையுடனும் இருக்கும். இதில் நிறைவுற்ற கொழுப்புகள் எதுவும் இல்லை.

இந்த மொச்சை பயிறில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் தியமின், வைட்டமின் கே மற்றும் பி6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, 

கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு மெலிந்த புரதத்தை வழங்குகிறது.

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

உலர்ந்த மொச்சைக் கொட்டை - அரை கப் (ஊற வைக்கவும்),

சிறிய சதுர வடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் - 10,

நெய் - 2 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள:

தக்காளி - 2, 

மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 10,

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

கொத்த மல்லித் தழை - கால் கப்.

செய்முறை:
உலர் மொச்சை பிரியாணி செய்வது
அரைக்கக் கொடுத்துள்ள வற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற விடவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். 

இதில் மூன்றரை கப் நீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள், அரிசி, ஊற வைத்த மொச்சைக் கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். 

ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)