சூப்பரான எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? #friedrice





சூப்பரான எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? #friedrice

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. 
சூப்பரான எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.
வீட்டிலேயே எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 3 /4 கப்

எண்ணெய் – 2 1 /2 மேசைக் கரண்டி

முட்டை – 2

சோயா சாஸ் – கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் – கால் தேக்கரண்டி

சிக்கன் எலும்பில்லாதது – 400 கிராம்

கேரட் – 2

பட்டாணி – அரை கப்

வெங்காயத் தாள் – சிறிதளவு

பாஸ்மதி அரிசி – 2 கப்
செய்முறை :

அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப்பதம் வற்றும் வரை வறுத்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். 

குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும்.

சிக்கனை எலும்பு இல்லாமல் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். 

கேரட், வெங்காயத் தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.
கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி (முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .
இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத் தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

இதனுடன் 2 மேசைக் கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும். எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெடி.
Tags: