கத்திரி வாழைப்பூ தொக்கு செய்வது எப்படி?





கத்திரி வாழைப்பூ தொக்கு செய்வது எப்படி?

வாழைப்பூக்களில், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற மிக முக்கியமான சத்துகள் அடங்கி யிருக்கின்றன. அதே போல, வைட்டமின் C + ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன. 
கத்திரி வாழைப்பூ தொக்கு செய்வது
அந்த வகையில், சரும பாதுகாப்பை வாழைப்பூக்கள் தருகின்றன. சிறுநீரகத்தில் கற்கள், அல்லது சிறுநீரகத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு உதவக்கூடியது இந்த வாழைப்பூக்கள் தான். 

இதனால் சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.. அத்துடன், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களையும் ஆற்றி விடும். நார்ச்சத்து மிக்க இந்த வாழைப்பூக்கள் மலச்சிக்கலை தீர்க்கின்றன. 
ஏகப்பட்ட புரோட்டீன்கள் இருப்பதால், எடை குறைக்க விரும்புவர்களின் பெஸ்ட் சாய்ஸாக இந்த வாழைப்பூ உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவே கூடாது உணவில் இந்த வாழைப்பூக்களும் ஒன்று. 

காரணம், மேம்படுத்தப்பட்ட குளுகோஸை வெளியேற்றுவதுடன், சர்க்கரை அளவையும் சீராக்குகிறது. கணையத்துக்கு வலிமை தரக்கூடியது இந்த பூக்கள். இதனால் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது. 

ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், கொழுப்பு சத்து உள்ளவர்கள் உணவில் வாரம் 2 முறையாவது சேர்த்து கொள்ள வேண்டியது வாழைப்பூக்கள். 

வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெறும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும். 
ரத்த மூலத்துக்கும் நிவாரணத்தை தருகிறது. வாரம் 2 முறை இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்த மூலம் விரைவில் குணமாகும். 

உடல் சூடு உள்ளவர்களும், வாழைப்பூவுடன் பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து, நெய் சேர்த்து வாரம் 2 முறை சாப்பிட்டாலே உடல்சூடு தணிந்து விடும். 

வைட்டமின் A உள்ளதால், கருவிழி போன்றவற்றை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்புரை போன்றவற்றை முன்கூட்டியே தடுக்கின்றன.

சுவையான பனீர் தோசை செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் – 3

வாழைப்பூ – 50 கிராம்

லவங்கப்பட்டை – சிறு துண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்

தக்காளி சாறு – 1 கப்

கடுகு – சிறிதளவு

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
கத்திரிக்காயை வெட்டி, லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும். நறுக்கிய வாழைப் பூவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, லவங்கப் பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

பிறகு தக்காளி சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேக வைத்த வாழைப்பூ, வதக்கிய கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்
Tags: