வெந்தய கீரை புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது.
மேலும் வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இந்த இரும்புச் சத்துப் உடலில் ஏற்படும் ரத்தசோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை குடித்து வர நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?
மேலும் வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
1 கப் வெந்தய கீரை
1/2 கப் சீனா வெங்காயம்
1 கப் தக்காளி பொடியாக நறுக்கியது
1/4 கப் தேங்காய் அல்லது முந்திரி விழுது
3 மேஜைக் கரண்டி எண்ணெய்
2 தேக்கரண்டி சாம்பார் மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 தேக்கரண்டி உப்பு அல்லது தேவையான அளவு
1 தேக்கரண்டி கடுகு
செய்முறை:
வெந்தய கீரை வேரை நறுக்கி நன்றாக 3 அல்லது 4 முறை கழுவ வேண்டும். ஒரு வாணலியில், மிதமான சூட்டில் 3 மேஜைக் கரண்டி எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொறிய விடவும்.
கடுகு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சாம்பார் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் விடும் வரை வதக்கவும்.
சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?
இப்பொழுது சுத்தமாக கழுவிய வெந்தய கீரை சேர்த்து 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
இறுதியாக தேங்காய் அல்லது முந்திரி விழுது சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான வெந்தய கீரை தொக்கு தயார். சூடான வெள்ளை சோற்றுடன் பரிமாறவும்