சூப்பரான பீர்க்கங்காய் சட்னி ரெசிபி செய்வது எப்படி?





சூப்பரான பீர்க்கங்காய் சட்னி ரெசிபி செய்வது எப்படி?

0
பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு சத்தான காய்கறி பீர்க்கங்காய். இந்த காயில் கலோரிகள் குறைவாக மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 
சூப்பரான பீர்க்கங்காய் சட்னி ரெசிபி செய்வது எப்படி?
ஹெல்தி டயட்டை பின்பற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு பீர்க்கங்
காய் சிறந்த தேர்வாக இருக்கிறது. பீர்க்கங்காயில் Charantin என்ற காம்பவுன்ட் உள்ளது, இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது நீரிழிவு நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காய் ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது. 

இந்த காயில் உள்ள நார்ச்சத்து ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகிறது. 
பீர்க்கங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இந்த காய் ஒரு இயற்கை மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. 

இதன் மூலம் குடல் இயக்கம் சீராக இருக்கும் மற்றும் இந்த காய் இரைப்பை குடல் பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது. பீர்க்கங்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. 

மேலும் இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் சருமம் சேதமாகாமல் பாதுகாக்க உதவுகிறது. தவிர இந்த காயில் சருமம், கூந்தல் மற்றும் நகங்களை பராமரிக்க அவசியமான ஒரு மினரலான சிலிக்கா உள்ளது. 
எனவே பீர்க்கங்காயை தொடர்ந்து டயட்டில் சேர்ப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் முன்கூட்டிய வயதாகும் அறிகுறிகளை தடுக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் (சிறியது) – 2,

இஞ்சி – ஒரு சிறிய துண்டு,

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

கடுகு – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பீர்க்கங்காய் சட்னி ரெசிபி
வாணலியில் எண்ணெய் விட்டு, பீர்க்கங் காயை தோல் சீவி நறுக்கி வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். 

வதக்கிய பீர்க்கங் காயுடன் தேங்காய்த் துருவல், உப்பு, வறுத்த கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து, 
சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, கடுகு தாளித்துக் கலந்து பரிமாறவும். இது… தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)