பச்சை மிளகாய் - மல்லித் தொக்கு செய்வது எப்படி?





பச்சை மிளகாய் - மல்லித் தொக்கு செய்வது எப்படி?

0
பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
 பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு
பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த  ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது. 

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில்  இருக்கும்.

பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க  உதவுகிறது பச்சை மிளகாய். 

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம். 

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.

காந்தியை கொன்ற கோட்சேயை நாடறியும் அவரை காப்பாற்றிய பதக் மியானை தெர்யுமா?

தேவையானவை:

மல்லித்தழை – 2 கட்டு,

பச்சை மிளகாய் – 15,

புளி, எலுமிச்சம்பழம் – சிறிய அளவு

உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்,

பூண்டு – 6 பல். தாளிக்க:

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – கால் கப். வறுத்துப் பொடிக்க:

வெந்தயம் – 1 டீஸ்பூன்,

பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை:
மல்லியைச் சுத்தம் செய்து, அலசித் தண்ணீரை வடிய விடுங்கள். ஒரு துணியில் அதைப் பரப்பி, ஈரம் காயும் வரை உலர விடுங்கள். 

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, அதில் கடுகு தாளித்து, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள்.

மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !

பின்னர் மல்லித் தழையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கி, ஆறியதும் எல்லா வற்றையும் நைஸாக அரையுங்கள். வறுத்துப் பொடித்த வெந்தயம் - பெருங்காயத் தூள் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)